இலங்கை: முழு மீட்சி உறுதி செய்யப்படவில்லை : IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டதுடன் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருக்கின்ற போதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அது தெரிவித்துள்ளது.

இரட்டை நிலைப்பாடு

(இலங்கநாதன் குகநாதன்)

கனடாவுடனான சிக்கலில் இந்தியாவினுடைய இறையாண்மை போய் விட்டது என வாய் கிழிய வட இந்திய ஊடகங்களும், இந்துத்துவவாதிகளும் கூச்சலீட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததே! உண்மையில் அச் சிக்கலில் கனடாவின் இறையாண்மைதான் பாதிக்கப்பட்டது, அதாவது கனடா மண்ணில் இந்திய உளவாளிகள் தமது எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தினை நடாத்திய செயல் அது.

2000 ரூபாயை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்

புழக்கத்திலுள்ள ரூ. 2000 நாணயத்தாள்களை மீளப் பெறுவது தொடர்பில் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருந்த நிலையில், பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் இந்திய நாணயத் தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமரை சாடுகிறார் அலி சப்ரி

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் கனடாவிற்கிடையில் நிலவும் பதற்ற நிலை குறித்து இந்திய ஊடகமான ANI க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா  குழுவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் இராஜதந்திரமற்ற செயல்

(சாகரன்)

உலக அரங்கில் இன்று அதிகம் பேசப்படும் விடயம் எது என்றால் அது ரஷ்யா உக்ரேன் போர் என்று சிலர் நினைக்கலாம்….

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஐரோப்பிய மேற்குலகின் சுரண்டல்களுக்கு எதிரான மக்கள் மன நிலை அதுசார்ந்த அரசியல் நிலமை என்று தோன்றலாம்……

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஒக்.15 ஆரம்பம்

சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியா நாகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அது பெரிய கதை இப்போது சொல்ல முடியாது”

நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன். திடீரென அவரை பிரதமராக நியமிக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட கொள்கை பிரச்சினை காரணமாகவே இவ்வாறு செய்தேன் என்றார்.

போதை ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் வீதி விழிப்புணர்வு நாடகம்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க புதன்கிழமை (20) நடைபெற்றுள்ளது.