நிறைவேறியது சட்டமூலம்

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக  103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.  

ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி  பூநகரி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவிற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்களால் இன்று (07) பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் கோரல்

2022 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (05) 5.9.2024 கிழக்குப்பல்கலைக்கழக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரே பார்வையில் சிறந்த பெறுபேறுகள்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப்பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

சாதாரண தர ,உயர்தர மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலை அமைப்பிற்குள் இருக்கும்போதே தொழிற்கல்வி தொடர்பான ஐந்து அடிப்படைப் பகுதிகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அவர்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று வரை 2 இலட்சம் பேர் பறந்துள்ளனர்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்ததைத் தொடர்ந்து நேற்று வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு

UK Channel-4 News, ‘Sri Lanka’s East Bombings – Dispatches’ என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும்   நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக செனல்-4 தாக்குதலுக்கு  ‘உடந்தையாக உள்ள அதிகாரிகளின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.