தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை(1) காலை 10 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னார் பஜார் பகுதியில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,கலையருவி இயக்குனர் அருட்தந்தை செல்வநாயகம் அடிகளார்,மன்னார் தமிழ் சங்கத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.
Month: September 2023
சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“பொன்கொடு தீவின் வாணர் பாலம்”(பண்ணைப் பாலம்)
புங்குடுதீவையும் வேலணை தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி ‘வாணர் சகோதரர்களின்’ அரிய முயற்சியின் பலனாக இன்றும் உறுதியாக நிற்கின்றது. அக்காலத்தில் இச்செயற்றிட்டம் நிறைவேற முன்னின்றுழைத்த “வாணர் சகோதரர்களை” காலங்காலமாக நினைவுகூர்ந்து, எமது வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
Ranil’s EPF-ETF கொள்ளையின் ஆபத்து කොල්ලයේ භයානකකම
ஊழியர் சேமலாபநிதி- நம்பிக்கை நிதி 3.5 மில்லியன் தொழிலாளர்களின் உழைப்பு! எதிர்காலம்!! வாழ்வாதாரம்!!!இவை பாதுகாக்கப்பட வேண்டும்! உள்நாட்டு கடன் சீரமைப்பு என்ற போர்வையில் ரணில் செய்யப்போகும் பகல் கொள்ளையை தடுப்பதற்கு இன மொழி வேறுபாடுகளை கடந்து கைகோர்க்க வேண்டும். தோழர் சுகு சிறீதரன் (SDPT), ஊடகவியலாளர் Poddala Jayantha ஆகியோருடன் இரு மொழி உரையாடல்.hey – you should join us Sunday at 11:30 a.m. EDT for “Ranil’s EPF-ETF கொள்ளையின் ஆபத்து කොල්ලයේ භයානකකම”.
3 ஆயிரம் தாதியர்களை இணைக்க நடவடிக்கை
வருகிறார் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு; குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல்
குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக் கேள்வி கேட்பவர்களைக் குறிவைத்து துன்புறுத்துவது மக்கள் மத்தியில் சுய தணிக்கையை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தது.
எமது இன்றைய மௌனம்; எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்
எமது இன்றைய மௌனம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் பாரிய துரோகம் என்பதனை மனதிற்கொள்வோம் என்றும் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து இணைந்து பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ள புழுதி- சமூக உரிமைகளுக்கான அமைப்பு, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கமும் அதன் பொலிஸாரும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.