கிறித்தவ அமைப்பு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலை உடனடியாக நிறுத்தக்கோரி மட்டக்களப்பு நகரில் இன்று (16) கிறிஸ்தவ இளைஞர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அப்பாவி மக்கள் இரு தரப்பிலும் பலியாகும் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தை நிறுத்து உட்பட் பல வாசகங்களைக் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டகார்கள் ஏந்தியிருந்தனர்.

காசாவில் போர் நிறுத்தம்

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருந்தபோதிலும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தெற்கு காசாவில் இன்று (16) காலை 6 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வரும்.

யாழில் 40 வருடங்களின் பின் கப்பல் சேவை; அமோக வரவேற்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான  பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக  இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது.

கடமை நீக்கம்; யாழ். போதனா வைத்தியசாலை அதிரடி

யாழ். போதனா வைத்தியசாலைக்கு  வந்த நபர் மீது தாக்குதல்  மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

வரலாற்று நிகழ்வு: இந்திரா பிடல் காஸ்ரோ

(Rathan Chandrasekar)

அமெரிக்கா ஒருபக்கம்.
சோவியத் யூனியன் ஒருபக்கம்.
உலகம் இந்த அரசியலினூடே இரு துருவங்களாகப்
பிரிந்திருந்த காலம்.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி

(புருஜோத்தமன் தங்கமயில்)

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சைரன் ஒலி கேட்டு குழந்தையுடன் ஓடினேன்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்று காலை டெல்லிக்கு முதல் விமானம் வந்தது. முதல் விமானத்தின் மூலம் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பியவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். நாடு திரும்பியர்வகள் பலரும் இஸ்ரேல் நிலவரத்தை விளக்கினர். அவர்களில் இளம் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் தப்பித்ததை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.

தொடரும் துயரம்

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தையான வவுனியா மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது65) சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.  
  இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.