ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 2வது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Month: October 2023
இஸ்ரேல் எச்சரிக்கை
காசாவில் வசிக்கும் 10.1 லட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்திற்க்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுவது நல்லது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல் இராணுவம் ஐ.நா.விடம் 10.1 லட்சம் மக்களை காசாவின் தெற்குக்கு அப்புறப்படுத்துமாறு கோரியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வீடியோவை நீதிபதிகள் பார்த்தனர்
ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள், வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் காட்சிப்படுத்தப்பட்டது.
வாழ விடு வாறை விடு (பகுதி 2)
வாழ விடு……. War ஐ விடு…… (பகுதி 1)
ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா
உள்ளடக்கம்
- ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா
- இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
- அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
- யூதர்களுடன் முரண்படும் புலம் பெயர் தமிழர்கள்
- சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
- இஸ்ரேலின் வாகரையும் இலங்கையின் காஸாவும்
- பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
- தமிழர்கள் ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
- தமிழீழ – பாலஸ்தீன சகோதரத்துவம்: ஒரு மீள் பார்வை
- பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
- தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
- இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்
- கிறிஸ்தவ நாடுகள்(ஈழத்)தமிழரின் நேச சக்திகளா?
இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு”
இஸ்ரேல் நாட்டின் மீது பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தொடங்கினர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. பதிலுக்கு இஸ்ரேலும் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்
(Thesam Jeyabalan)
48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீனம்
“எனது நாட்டில் ஒரு சாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள், எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்”.
- மஹ்மூத் தர்வீஷ்
தமிழில் எம். ஏ. நுஃமான்
பலஸ்தீனக் கவிதைகள்
மூன்றாவது மனிதன் வெளியீட்டகம்