மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
Month: October 2023
இனிமேல் அரச வேலைவாய்ப்பு இல்லை
’’சாதாரண சாரதி வேண்டும்,பைத்தியக்காரன் வேண்டாம்”
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது மோசமான பஸ் பயண அனுபவத்தை பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார். நாட்டின் அழகைக் காண கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பேருந்தில் வந்ததாக குறித்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கூறினார்.
ஆப்கான் நிலநடுக்கத்தில் 2000 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (07) காலை 11 மணியளவில் ஹெராத் நகருக்கு மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தில் 2000 பேர் பலியாகியுள்ளனர்.
வைத்தியரும் நீதிபதியும் உணர்த்தும் பாடங்கள்
இஸ்ரேலில் யுத்தம்!
இஸ்ரேலின் மீது பாரிய தாக்குதலொன்றை பலஸ்தீனக் குழுவான ஹமாஸ் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த அதிரடித் தாக்குதலில் இஸ்ரேலுக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்ததுடன், காஸாவிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட றொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்றைய தினம் (ஒக்டோபர் 05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாய் ஒன்றுக்கு நிகரான ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.2266 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9081 ஆகவும் பதிவாகியுள்ளது.