மல்வத்து ஓயாவைத் தேடி….

(Thulanchanan Viveganandarajah)

கடந்த மாதம் இலங்கை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்பட்ட “மல்வத்து ஓயாவைத் தேடி” (மல்வத்து ஒய சொய) என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் இரண்டாவது நீளமான ஆறான மல்வத்து ஓயாவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சிங்கள – ஆங்கில இருமொழி ஆவணப்படம் அது.

மதிப்புக்குரிய தர்மசிறி பண்டாரநாயக்க…!

(அ.யேசுராசா)

நேற்று இரவு, யாழ்ப்பாணம் ‘றீகல்’ திரையரங்கில் நடைபெற்ற – 9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனைக்கான விருது, புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது! ; மிக்க மகிழ்ச்சியைத் தருவ தாக அது இருக்கிறது! அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்து!

பின்வாங்க போவதில்லை; அமைச்சர் அதிரடி

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் முத்துவெல்ல விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அதிரடி நடவடிக்கையில் 2,296 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப்பணிப்பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு விமானப் பணிப்பெண்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​விண்ணப்பதாரர்கள் தெளிவான முக அமைப்பு, குறிப்பாக சேலை அணியும் போது வெளித்தெரியக்கூடிய  கறையற்ற இடைப்பகுதி மேலும், பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலத்தில் புலமை அவசியம் என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

132 இல் 15 சிறுமிகள் விருப்பத்துடன் பாலியல் துஷ்பிரயோகம்

கண்டி பொலிஸ் பிரிவில் 17 பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அரைக் காற்சட்டை நபரால் பெறும் சர்ச்சை

சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ். பல்கலைக்கழகத்திலும் திரையிடப்படுகின்றது. இந்நிலையில், அரைக் காற்சட்டையுடன் செவ்வாய்க்கிழமை (19) வந்த ஒருவரை அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

மாணவர்களுக்கான போதையொழிப்பு விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற இந்நிகழ்வானது No drugs  நாங்கள் youth ” போதை பொருள்  அற்ற இளைஞர் தலைமுறை ”  என்ற தொனிப் பொருளின் கீழ் செவ்வாய்க்கிழமை (19) பாடசாலையில் இடம் பெற்றது. 

மொட்டில் தம்மிக்க மலரும் வாய்ப்பே அதிகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய நான்கு வேட்பாளர்களில் ஒருவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தகுதியை இழந்தார் ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பினை அறிவித்துள்ளது. அமெரிக்க அரசியல் அமைப்பின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.