“உக்ரேனில் அமைதி திரும்பாது”

உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ,இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்கி வருகின்றன.

ஜனாதிபதி தோ்தலில் அல்-சிசி மீண்டும் வெற்றி

எகிப்து ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எகிப்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10 திகதி முதல் 12-ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் திங்கட்கிழமை (18) அறிவிக்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால்  டெங்கு நுளம்பு  பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

‘மலையக குயில்’ நாடு திரும்பினார்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று ஞாயிற்றுக்கிழமை (17) நேரலையாக ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இறுதிச்சுற்றில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றிப்பெற்றார்.

கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கிளிநொச்சி – கரியாலை நாகபடுவான் குளத்திலிருந்து அதிக நீர் வெளியேறி வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

திம்புவா…? இலங்கை – இந்தியா…? இமாலயாவா…?

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தல் என்பதாக தற்போதும் ஒரு புது முயற்சி ஆரம்பமாகி இருப்பதாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இதற்கான பலபரப்பை ஏற்படுத்தியவர்கள் இதற்கான முன்னெடுப்பை உலகத் தமிழர்(Global Tamil Forum) (GTF).

7 ஆயிரம் பேர் மழையால் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இனி விசா தேவையில்லை

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் ஈரான் நாடு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மிக்கல்லின் கீழ் ‘போதை’ குழி: பெண் கைது

அம்மிக்கல்லின் கீழ் கவனமாக தோண்டப்பட்ட குழிக்குள் மறைத்து வைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7500 ரூபாவில் ஒரு நாட்டைக் கைப்பற்றல்

இலங்கையில் உள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங், வட மாகாணத்துக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நவம்பர் 5-7 ஆம் திகதிகளில் முன்னெடுத்து  ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.