இரணைமடு நீர்மட்டம் அதிகரிப்பு

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சத்தியசீலன் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய (15) மதிய உணவு நேரத்தில்   விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

விசேட போதை ஒழிப்பு வேலைத்திட்டம்

புதிய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் விசேட போதை ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர்  சனிக்கிழமை (16) இடம்பெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

ஓப்பன்ஹைமர்

(ரதன்)

கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குனர். இவரது கதை சொல்லும் முறையானது நேர் கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு, துண்டாக ஒழுங்கற்றிருக்கும். (நொன்-லீனியர்) இவை எதிரொலிகளாக, சம்பவங்களின் நினைவுகளாக, இடைச் செருகல்களாகவிருக்கும். ஆடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீக பிரச்சினைகளை இவரது திரைக் கதை வெளிப்படுத்தினாலும், உலக ஒழுங்கை மீறுவதாக ஒரு மாயை தோற்றுவிக்கும்.

மார்கழி 13 1986….

மார்கழி 13 இதே நாள் 1986 ஆம் ஆண்டு இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடை செய்யும் தாக்குதலை புலிகள் தொடுத்தார்கள். தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டார்கள். போராட்டத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டார்கள்.

முன்கூட்டிய தயாரிப்பு இல்லாத புதுடெல்லி சந்திப்பு

(அ. நிக்ஸன்)

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால், கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. 

பாராளுமன்றில் பதற்றம்: புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பாராளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் கலரியில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இடுப்பை தொட்டவருக்கு குடை ​நெளிய தாக்குதல்

கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின்,  இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மிளகாய் செய்கையின் அறுவடை விழா

விவசாய திணைக்களத்தினால்  வழங்கப்பட்ட கலப்பின செத்தல் மிளகாய் செய்கையின் அறுவடை விழா பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட மட்டக்களப்பு பொறுகாமம் கிராமத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.