(ரதன்)

மனிதன் நாகரீகமடைந்து வளர்ச்சிகண்டு கூட்டமாக அலைந்து ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?