சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2,400 ரூபாய் முதல் 2,600 ரூபாய் வரையிலும், தலபத் மீன் 3,200 ரூபாய் முதல் 3,400 ரூபாய் வரையிலும், சால மீன் 650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம், அட்டவல்ல 1,500 ரூபாவாகவும், லின்னோ 1,000 ரூபாவாகவும், இறால் 1,600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Month: January 2024
அனைவருக்கும் புது ‘வரி’ச வாழ்த்துகள்
நிலநடுக்கத்தால் நகர்ந்த ஜப்பான் நிலப்பரப்பு
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – ’’மனித ஆட்கொலை’’
விமான நிலையங்களில் 28 பேர் அதிரடியாக நீக்கம்?
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் பதவிகளை வகித்த 28 தலைவர்களின் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
தேவை ஒரு தலைமைத்துவச் சங்கிலி
மகள்களை விற்கும் பெற்றோர்
பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு
வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு ; மக்கள் பீதி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத்தோட்டத்தில் உள்ள எட்டு பிரிவுகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சிறுத்தைகள் வந்து தொழிலாளர்களின் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்வதாக அத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.