கங்கையில் யாரும் குளிக்க வேண்டாம்

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

பலஸ்தீன பிரதமர் இராஜினாமா

பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், பலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை இராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்ள்ளார்.

முதல் பெண் முதலமைச்சர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்

பஷில் நாடு திரும்பியதும் புதிய அரசியல் கூட்டணி?

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய – மீனவர் பிரச்சினைக்கு புறக்கணிப்பு தீர்வைத் தராது

(லக்ஸ்மன்)

எல்லை தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்திய நாட்டின் பக்தர்கள் கலந்து கொள்ளாமைக்கும் இருக்கின்ற தொடர்பு சற்று வித்தியாசமானதுதான்.

’மலையக மக்களின் பிரச்சினைகளை மட்டுப்படுத்தக் கூடாது’

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என ஒவ்வொரு பகுதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று  நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 18 நாள்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

“ தென்னிந்திய நடிகைகளின் வருகை ; தவத்தைக் கலைத்த கதை”

தமிழ் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக்  கொண்டிருக்கிறது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப்  பாதைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில்  போதைப்  பொருட்கள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டன.

5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

 “திடீரென சத்தமொன்று கேட்டது. ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண்ணை திறந்து பார்த்தபோது, எனக்கு அருகில் காயமடைந்து விழுந்த எனது தம்பியை அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றியதை பார்த்தேன். பின்னர் என தம்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ளதை இரண்டு நாட்களுக்கு பின்னரே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாட்களாக தம்பியை பற்றி எந்த தகவலும் இல்லை” இவ்வாறு தனது கதையை பகிர்ந்து கொள்கிறார் கட்டுவாப்பிட்டிவில் வசிக்கும் 22 வயதான தினுக்கி கௌசல்யா.

உக்ரேனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்

உக்ரேன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.