2022 மே 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ‘அரகலய’ போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் நட்டஈடு அலுவலகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
Month: March 2024
முன்னாள் போராளி அரவிந்தன் கைது
நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்கு
காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்
கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்; அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம்
சமாதியில் உறுதிமொழி எடுத்த வீரப்பனின் மகள்
குறைந்த சம்பளம் 17,500 ரூபாய்
தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச தினக்கூலியும் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும்.
ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது
(ச.சேகர்)
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.