இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Month: April 2024
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது
500,1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தக வெளியீடு
மொட்டு வேட்பாளர் யார்? ; ஆருடம் கூறினார் நாமல்
முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?
எம்.எஸ்.எம். ஐயூப்
ராஜபக்ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து, குறிப்பாக 2022 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கோப் என்று அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமை எடுத்துக் காட்டுகிறது.
கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.
’ஆடுஜீவிதம்’
வலிகளின் வேர்களைத் தேடி எழுத்தாக வடித்து கடந்த 2008-ம் ஆண்டு எழுத்தாளர் பென்யமின் (Benyamin) எழுதிய நாவல் ‘ஆடுஜீவிதம்’. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட நாவல். உண்மைச் சம்பவத்தை இரத்தமும், சதையுமாக எழுத்தின் வழியே காட்சிப்படுத்தியிருந்த நாவலின் திரையாக்கம்தான் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.
துரையப்பா கொலையும் வன்னி நோக்கிய பெயர்வும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின. அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.
அதிகரிக்கும் வெப்பம் – சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலயவில் திணைக்களம் இந்த எச்சரிக்கை அறிக்கையை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI சூழ் உலகு 17
ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.