இந்திய நாட்டை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆளப் போகிறார்கள், பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார் என்பது குறித்து மக்கள் தீர்ப்பு எழுதி வருகின்றனர்.
Month: May 2024
ஆயுதங்களை போலந்து வழியாக உக்ரேனுக்கு அனுப்பியதை மறுக்கும் இலங்கை
இலங்கையில் மேலதிகமாகவுள்ள ஆயுதங்களை உக்ரேனுக்கு மாற்றுவதற்கு இடைத்தரகராக போலந்து பயன்படுத்தபடுவதான அண்மைய ஊடக அறிக்கைகளை இலங்கையின் பாதுகாப்பமைச்சு மறுத்துள்ளது
ரஷ்ய போருக்கு இலங்கையர்களை அனுப்பியவர்கள் விளக்கமறியலில்…
இலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை அங்கிகரித்த தாய்லாந்து
இலங்கை உட்பட வேறு 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசாவில்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென்பதுடன் 60 நாள்கள் வரையில் தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2024 ஐ.பி.எல் நட்சத்திரங்கள்
கூட்டமாக வெளியேறும் பலஸ்தீனிய மக்கள்

காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் கூடாரங்கள் அமைத்து வசித்து வருவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிராக கடும் எதிர்வினையை ஆற்றியுள்ளது.
பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து
இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பெலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்துள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ரஃபா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், நோர்வே, ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நிலையில், அயர்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது
கால்நடைகளை காப்பாற்றவேண்டிய கடப்பாடு உள்ளது
பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையுமென கடந்தகாலங்களில் வாய்க்கிழிய பேசப்பட்டாலும், பெருந்தொகையான டொலரை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பால்மாவை இறக்குமதிச் செய்யவேண்டிய நிலைமையிலேயே நாடு உள்ளது. பாற்பண்ணை தொடர்பில் போதியளவில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
அனர்த்தங்களில் அரச இயந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது
நாடளாவிய ரீதியில், 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 9 பேர் மரணமடைந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் 12,2247 குடும்பங்களைச் சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் உள்ள பல ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், ஆறுகளை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.