ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கொட்டால் இன்று (12) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நியமிக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
Month: May 2024
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது
2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் டில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இந்தியாவின் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.
உக்ரேனில் புதிய முனையைத் தாக்கிய ரஷ்யா
உக்ரேனின் வடகிழக்கிலுள்ள இரண்டாவது நகரமான கார்கிவ்வுக்கு அருகே கவசவாகன தரைத் தாக்குதலொன்றை நேற்று ஆரம்பித்த ரஷ்யப் படைகள் சிறியளவு முன்னேற்றங்களைப் பெற்று கிழக்குக்கும் தெற்குக்குமிடையே நீண்ட காலம் இடம்பெறும் போரில் புதிய முனையொன்றைத் திறந்துள்ளனர். மேற்குறித்த பிராந்தியத்தின் மோதல்கள் எழுந்துள்ள எல்லைப் பகுதிகளில் மேலதிக படைகளை உக்ரேன் அனுப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆயுதப் பாவனை சட்டத்தை மீறியிலிருக்கலாம்: அமெரிக்கா
காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின்போது ஐக்கிய அமெரிக்காவால் விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களின் இஸ்ரேலியப் பாவனையானது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிலிருக்கலாமென ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
பி.ப 2 மணிக்குப்பின் காலநிலையில் மாற்றம்
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராய்வு
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
ஐ.பி.எல்லில் அறிமுகமான யாழ்ப்பாணத்தின் வியாஸ்காந்த்
விமான நிலையத்தில் ஒருவர் அதிரடி கைது
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல மாகாணங்களில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.