டயானா கமகேவின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக உள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே. இவர் இன்று (09) விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் கருத்து தெரிவித்த டயானா, “எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். ரணில் விக்ரமசிங்க மற்றவர்கள் மறைந்திருந்த போது இந்த நாட்டைக் கைப்பற்றினார். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன்” என்றார்

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட நேரத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தொடங்கியது மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல்!

குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்தது. இந்நிலையில், 94 தொகுதிகளில் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

போர் நிறுத்தத்திற்கு சம்மதித்த ஹமாஸ் அமைப்பு

காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1977 தேர்தல் வெற்றியும் தடுமாற்றங்களும்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1977 தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. 1970இல் ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இழைத்த தவறுகள் இவ்வாறானதொரு பாரிய வெற்றியை ஜே.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.

மன்னாரில் மின்னுற்பத்தி: அதானிக்கு அனுமதி

மன்னார் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் M/s Adani Green Energy Limited உடன் மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

யாழில். அதிக வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்   திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நெதன்யாகு கூறினார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையும் கேளுங்கள்

ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.. – மோடி

அழையா விருந்தாளியாக… திடீர்னு பாகிஸ்தான் போயி… பாகிஸ்தான் பிரதமரை கட்டிபுடிச்சு… கல்யாணத்தில் ஓசி பிரியாணி தின்னுட்டு… ஊருக்கு ஓடி வந்ததும்… மோடி சென்ற இந்திய விமான படை விமானத்துக்கு அவன் போட்டான் பாருங்க அபராதம் 2.86 லட்சம் ரூபாய்…. அதை இந்திய மக்களாகிய நாம் கட்டினோம்.

உலகின் வேறு எந்த நாட்டின் பிரதமரும் செய்யாத ஒரு மோசமான பாதுகாப்பு விதிமீறல் குற்றத்தை செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதிகாரப்பூர்வ அரசாங்க பயணத்தை முடித்துவிட்டு…

ஆப்கானிஸ்தானில் இருந்து நேராய் டில்லி வர இருந்த இந்திய விமானப்படை விமானத்தை, இந்திய அரசின் தரப்பில் இருந்து எவ்வித பாதுகாப்பு முன் ஏற்பாடும் இன்றி, இந்திய வெளியுறவுத்துறை அரசு அதிகாரிகளுக்கோ இந்திய விமானப்படை தலைமைக்கோ கூட முறைப்படி தெரியப்படுத்தாமல்… சிம்பிளாக ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு… பாகிஸ்தான் நோக்கி விமானத்தை திருப்பி, லாகூரில் விமானத்தை தரை இறக்கி, நவாஸ் ஷரீஃப் வீட்டுக்கு சென்று… அவரை கட்டிப்பிடிச்சு கொஞ்சி குலாவி போட்டோவுக்கு போஸ் கொடுத்து… அவரின் பேத்தி கல்யாணத்தில் கலந்துகொண்டு, கல்யாண பிரியாணி தின்றுவிட்டு டில்லி வந்து… இந்தியாவை…. பாகிஸ்தானுக்கு அபராதம் கட்ட வைத்த ஒரே இந்திய பிரதமர்… மோடி மட்டுமே..!

இதை… அன்றைக்கு…. தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத மோடியின் அபத்தமான செயல் என்று அன்றைக்கே காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது. இப்படிப்பட்ட மோடி, இன்று ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பாகிஸ்தான் விரும்புவதாக கொஞ்சமும் வெட்கமே இன்றி… கற்பனையில் அவதூறாக பேசுவது வன்மம்… அசிங்கம்… மட்டுமின்றி… அருகதையற்றவரின் அர்த்தமற்ற உளறல்..!