ஊடக சுதந்திரத்துக்கான வரலாற்று தீர்ப்பு

இரத்தினபுரியின் முன்னாள் ஆளுநர் திருமதி மாலானி லொக்குபோத்தகம மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஆகியோர் ஊடகவியலாளரிடம் பணிந்து, உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளர்.

பிளந்தது இ.தொ.கா: முக்கியபுள்ளி சஜித்துடன் இணைந்தார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார் மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஒரு மில்லியன் டொலருடன் கிளிநொச்சியில் மூவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு
முன்பாக  ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன்  மூன்று  பேரை
பொலிஸார் வியாழக்கிழமை (13) இரவு  கைது செய்துள்ளனர்.

லவ் யூ – னு சொல்லாம இப்படியெல்லாம் சொல்லலாம்

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் எதிர் பாலினத்திடம் ஐ லவ் யூ என்கிற வார்த்தையை அவ்வளவு எளிதாக சொல்லி விட மாட்டார்கள். அதை சொல்வதற்கு முன் ஏராளமான தயக்கங்களும் தயாரிப்புகளும் இருக்கும். சிலருக்கு நேரடியாக சொல்லக் கூச்சமாகவும் இருக்கும். அப்படி இருந்தால் i love you என்பதை வேறு எப்படியெல்லாம் மறைமுகமாக சொல்லலாம் என்று இங்கு பார்க்கலாம் வாங்க. லவ் யூ – னு நேரடியா சொல்லாம இப்படியெல்லாம் கூட சொல்லலாம்! டிரை பண்ணுங்க வொர்க்அவுட் ஆகும்.

கதிர்காம காட்டுப்பாதை: இந்துக்கள் மத்தியில் குழப்பம்

வரலாற்றுப்  பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதாவது  இப் பாதை திறக்கப்படும் திகதி ஜூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது .

தமிழர்கள், கூட்டமைப்புக்கு நாமல் அறிவுரை

வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்

’கோமாளிக்கூத்துக்கு எதிராக பிரசாரம்’

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழரசு கட்சி பிரசாரம் செய்யும் என அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி பலி

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய வாக்குறுதி

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. ரஷ்யாவுக்கு  விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.