
தமிழ் தேசிய கட்சிகளுக்கும். தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. தந்தை செல்வா அரங்கில் காலை 11:30 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் இடம்பெற்றது.
The Formula
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த, நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
(முருகானந்தம் தவம்)
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதில் வெற்றி பெறுவதற்கான எதிர்கட்சிகளை பிளவுபடுத்தும், சூழ்ச்சிகளும் எம்.பி.க்களை வளைத்துப்போடும் பேரம்பேசுதல்களும் தீவிரம் பெற்றுள்ளதால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(மொஹமட் பாதுஷா)
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பும், அதனை ஒத்திவைப்பதற்கு இன்னுமொரு தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. எது எவ்வாறிருப்பினும் மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை வரும் என்ற அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நகர்வுகளையும் சமகாலத்தில் சிறிய, பெரிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.