அகழ்வாய்வு பணிகளின் நிறைவில் 47 மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள், அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் உயர்ந்துள்ளது

நாட்டின் போக்கை பற்றி நம்பிக்கையுடன் சிந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜூன் இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது  என வெரிட்டேரிசர்ச்சின் 2024 ஜூலைக்குரிய ‘தேசத்தின்மனநிலை’ கருத்துக்கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன

டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு

பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. 

கொக்குத்தொடுவாயில் 7 மனித எச்சங்கள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மேலும் ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்படுள்ளன. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6வது நாளான புதன்கிழமை (10) , மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

“மாளிகையில் சூழ்ச்சி”

ஜனாதிபதியின் பதவிக்  காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு எதிராக  செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது  என ஜே .வி.பி. தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க  ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார் எனவும் கூறினார்.

சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான அலுவலகத்துக்கு பூட்டு

விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக, அப்பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்

தற்போதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம், இன்னுமோர் ஆண்டுக்கு நீடிக்குமா? இல்லையா? என்ற சந்தேகத்துக்கு உயர்நீதிமன்றம், திங்கட்கிழமை (08) தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு தினம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன்

என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

சாவகச்சேரி மக்கள் போராட்டம் ஒரு அறச் சீற்றம்

(தோழர் ஜேம்ஸ்)

இலவசக் கல்வி இலவச மருத்துவம் என்பன இலங்கை மக்களுக்கு கிடைத்த உரிமைகள்…… வரப்பிரசாதங்கள்…..

இந்த இலவசக் கல்வியினால், மருத்துவத்தினால் கல்வியை ஆரோக்கியத்தைப் பெற்று உயர் கல்வி வரை பணம் ஏதும் செலுத்தாது தமக்கான சமூகத்திற்கான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தனர்.