’புதிய கல்வி முறையினை அறிமுகப்படுத்தப்படும்’

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும் அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஈரான் ஜனாதிபதியானார் பெசஸ்கியான்

ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த ஜூன் 19ஆம் திகதி நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்தது.

6 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்து 7 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து சூரத் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோ கணேசனுக்கு எதிராக மலையகத்தில் போராட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மணோகனேஷன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஞாயிற்று கிழமை  போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு எதிராக வாசகங்கள் பறித்த பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. 

பிரிட்டன் தேர்தலில் வெற்றிப் பெற்ற முதல் தமிழ் பெண்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பரூக்கி, அர்ஷ்டீப்

ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானின் பஸல்ஹக் பரூக்கியும், இந்தியாவின் அர்ஷ்டீப் சிங்கும் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

பிரி. பாராளுமன்ற தேர்தல் இன்று

பிரித்தானிய பராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.

பெரில் புயலுக்கு பலர் பலி

பெரில் புயலால் ஜமைக்கா உள்ளிட்ட, புயல் பாதித்த நாடுகளில் பல உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் சின்னம் உருவானது. இந்த புயலுக்கு ‘பெரில்’ என பெயரிடப்பட்டது.

வடக்கில் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.