அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மழை பய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) பிற்பகல் 1:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
Month: August 2024
ஆசிரியை அடித்த உப-அதிபர் உட்பட நால்வர் கைது
பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக அதே பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவுக்கு வெளியே சுவீடனில் குரங்கம்மை பாதிப்பு
குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்பட கூடிய தொற்று நோய் ஆகும். ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை பாதிப்பு பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவளித்த ‘மொட்டுகளுக்கு’ சிக்கல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிராமத்துக்கு தவறாமல் வரும் ஆபத்தான விலங்கு”
கண்டி, பதியபெலெல்ல நுகாய பிரதேசத்தில் சிறுத்தைப் புலியொன்று நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமத்தின் மேல் உள்ள காப்புக்காடு பகுதியில் இருந்து மாலை நேரத்தில் கிராமத்திற்கு வரம் பெரிய சிறுத்தைப் புலி கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பது வழக்கமாகிவிட்டது. மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர்.