(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையில் அனுசரணை அரசியலின் சமகால வெளிப்பாட்டின் வேர்கள் கொலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்திலேயே காணப்படுகின்றன. கொலனித்துவ தலையீடு மற்றும் நிர்வாகத்தால் கொலனித்துவத்திற்கு முந்தைய ஆதரவு உறவுகள் மாற்றப்பட்டன.
The Formula
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை(30) அன்று சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் அரச அதிபரின் வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை இடைநடுவில் கை விட்டுச் சென்றனர்
நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்தார்.