Month: September 2024
’ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது’
தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் வெளியானது
சம்பள பேச்சு இணக்கமின்றி முடிவு
அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீத சம்பள உயர்வு
- அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு.
- முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- ஆசியர்களுக்கு 17,480 – 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
- நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
- வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
- அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழையால் 27 பேர் பலி
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.
’விஜய்யுடன் கூட்டணி இல்லை’ – சீமான்
2026 இல் தனித்து போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த சீமான், 2026 இல் தனித்து போட்டியிடுகிறேன். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன் என்றார்.
5 வருட அவகாசம் கோருகின்றார் ஜனாதிபதி
முருகேசு சந்திரகுமார் சஜித்துக்கு ஆதரவு
முடிவுக்கு வரும் ஆண் இனம்? ஆய்வில் அதிர்ச்சி
ஆண்களிடம் காணப்படும் ‘லு குரோமோசோம்கள்’ மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான ‘லு குரோமோசோம்’ எவ்வாறு மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உயிரியலாளர்கள் ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.