வெனிசுலா ஜனாதிபதியின் சொகுசு விமானம் பறிமுதல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
  இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  மேற்படி விமானம் டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதன் பெறுமதி  இலங்கை ரூபாயில் 400 கோடி என தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு இடையில், மதுரோவுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இந்த சொகுசு விமானத்தை வாங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

’ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது’

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்,

தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் வெளியானது

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் செவ்வாய்க்கிழமை (03) வெளியிடப்பட்டது.

சம்பள பேச்சு இணக்கமின்றி முடிவு

தொழிலாளர்களின்  நாட் சம்பளம் குறித்து செவ்வாய்க்கிழமை (03)     இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளும் எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவுற்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் பேச்சு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீத சம்பள உயர்வு

  • அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு.
  • முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • கதிரியக்கவியல்மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • ஆசியர்களுக்கு 17,480 – 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
  • அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழையால் 27 பேர் பலி

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

’விஜய்யுடன் கூட்டணி இல்லை’ – சீமான்

2026 இல் தனித்து போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த சீமான், 2026 இல் தனித்து போட்டியிடுகிறேன். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன் என்றார்.

5 வருட அவகாசம் கோருகின்றார் ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.