”அனுபவம் இன்றி பாராளுமன்றத்தை நடத்த முடியாது”

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்திய மக்களின் இதயத்தில் இறுக இடம் பிடித்த டாடா(TATA)

(தோழர் ஜேம்ஸ்)

(இந்தப் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் டாடா(TATA) நிறுவனத்தின் செயற்பாடுகளை துல்லியமாக எடுத்து இயம்புகின்றது)

1962 ம் ஆண்டு நடைபெற்ற சீன இந்திய யுத்தம் இவரின் வாழ்வை தனி மனிதனாக திருமணம் செய்யாது வாழ்வதற்கும் வழி கோலியது.
அதுவே அவரின் வாழ்வின் இறுதி வரை தொடரவும் வைத்து.

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள  200 வீடுகள்,  சுற்றுலா விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல குறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி  காணப்பட்டுள்ளது.

உலகில் இரண்டாம் இடத்திற்கு ’எல்ல சில்’

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்களின்படி, பயண வழிகாட்டி இணையதளம், சிறந்த உணவகங்களில் சிறந்தது (BEST OF THE BEST RESTAURANTS) என்ற பெயரில் நடாத்திய  கருத்துக்கணிப்பில், ‘எல்ல சில்’ உணவகம் உலகின் சிறந்த உணவகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை – ஜனாதிபதி

அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”தற்காலிகமானது, தான் நிரந்தரமானது இல்லை”

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ரூ.3,000

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு 3,000 ரூபாய் இன்று (16) வைப்புச் செய்யப்படும் அதற்கான ஏற்பாடுகளை ஓய்வூதிய திணைக்களம் செய்துள்ளது.

மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு

மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான  விசாரணைகளும்   மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

”ஷானியின் நியமனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது”

ஷானி அபேசேகர குற்றப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.