”வரிப் பணத்தை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”

ரூ. 3.5 பில்லியன் வரி செலுத்தத் தவறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கைது

எத்துல் கோட்டே வீட்டுத் தொகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு பெண்கள் உட்பட 15 சீன பிரஜைகள் நேற்று (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் குறித்து சரத் பொன்சேகா எடுத்துள்ள தீர்மானம்

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

லெபனான் மீதான தாக்குதலில் 2,255 பேர் பலி

செப்டெம்பரில், லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதில் இருந்து குறைந்தது 1,645 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் ஆதரவு கணிப்பில் கமலா முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பிரசார நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

தரமற்ற டின் மீன்களை விநியோகிக்கும் முயற்சி முறியடிப்பு

உரம் அல்லது கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஆர்சனிக், தீங்கு விளைவிக்கும் கன உலோகம் கலந்த டின் மீன்களை சந்தைக்கு விநியோகிக்கும் முயற்சி ஒன்றை சுற்றுச்சூழல் அமைச்சகம் முறியடித்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

‘களுத்துறையில்’ தமிழ் சுயேட்சை குழு

களுத்துறை மாவட்ட வரலாற்றில், நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக  14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று “கோடரி” சின்னத்தில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. 

கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையால், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரத்தை கல்வியமைச்சு வழங்கியுள்ளது.

மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

(லக்ஸ்மன்)

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.