ஜனாதிபதி ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார். அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார்.

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதிவரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. அதன்படி உருளைக்கிழங்கு மீதான வரி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவுக்கு 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஓய்வை அறிவித்தார்

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்சங்கரின் முக்கிய சந்திப்புகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வமாக இன்று இலங்கை வந்துள்ளார். இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்ததுடன், புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், ஜனாதிபதியையும் சந்தித்தார். அந்த வகையில் இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார். மேலும், புதிய அரசாங்கத்தின் பிரதமர் கலாநிதி ஹரிணியையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். 

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்ததுடன், புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், ஜனாதிபதியையும் சந்தித்தார். அந்த வகையில் இன்று சஜித் பிரேமதாச அவர்களையும் சந்தித்துள்ளார். 

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நுவரெலியாவில் அண்மைக்காலமாக நிலவிய மரக்கறிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் இன்று (04) வெள்ளிக்கிழமை  நுவரெலியா பொருளாதார மத்திய  நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதால், விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அடாவடி செய்த பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்

நுவரெலியா நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று குழப்பத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.நா. பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  தனித்து களம் காண்கிறது.

வாகன இறக்குமதி குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.