மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

(லக்ஸ்மன்)

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

பிரதமரின் படங்களுக்கும் முன் அனுமதி தேவை

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பிரச்சினையால் கட்சிகளுக்குள் பிளவு?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதனால், கட்சிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மதுபானசாலை அனுமதி விவகாரம்; ‘வெளிப்படையாக வாக்குமூலம் வழங்கவும்’

யாருக்கும் மதுபானசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் உயிரிழந்தார்.

நீரில் மூழ்கியது சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் பணம் வைப்பிலிட்டோர் குறித்து விசாரணை

வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்படுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, அந்நாட்டு மக்களை ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.