அனுரவுக்காக விட்டுக்கொடுத்தார் விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

விமான சாகசம்: 240 பேர் மயக்கம்; 5 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மார்பகங்கள் பற்றி பேசுவதற்கு தயங்கும் பெண்கள்

சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.  

200 மில்லியன் டொலர்கள் வழங்க WB அனுமதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன யுத்தம் ; மட்டக்களப்பில் அமைதிப் பேரணி

பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் , பெண்களினால் அமைதி பேரணியொன்று திங்கட்கிழமை (07) காலை முன்னெடுக்கப்பட்டது .

காத்தான்குடி மாணவி கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம்

போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவி திங்கட்கிழமை (07) காலை ஆரம்பித்துள்ளார்.

6 கட்சிகள் போட்டியிட முடியாது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்னவின் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

உயர் அரசியல்வாதிக்கு சொந்தமான ஜீப் கண்டுபிடிப்பு

பதுளை – லுனுகல பிரதேசத்தில் உயர் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சொகுசு ஜீப் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தனியார் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் குறித்த ஜீப் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட சிறிய காரொன்றின் இலக்கத் தகடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெக்கில் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.