கியூபா மக்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒரு நாட்டின் அதிபரே சாலைக்கு வந்து மக்களைத் திரட்டி பேரணி நடத்துவது இதுவே முதல் முறை. ஆமாம், கியூப அதிபர் தோழர் மிகுவல் டயஸ் கேனல் அந்தப் பேரணியை நிகழ்த்தி பாலஸ்தீன மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

மூவினங்களும் வாழும் திருகோணமலையில்

(Freddy Abraham)

நேற்று காலை உட்துறைமுக வீதியில் ஒரு அலுவலாக செல்லும்பொழுது அங்கிருந்த உவர்மலை விளையாட்டு மைதானத்தில் பெரும் திரளான மக்கள் கூடியிருந்ததைக் காண முடிந்தது. என்னவென்று கொஞ்சம் எட்டிப் பார்த்தால் அது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாம்.
நேற்றுத்தான் நண்பர் ஒருவர் இலங்கையில் பணம் வழங்காமல் எந்தக் கட்சியாலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்கு ஆட்களைத் திரட்ட முடியாது என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் பண்ணாத குறையாக அடித்துக் கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி

UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு படிப்பு விருப்பங்களை ஆராய மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி   ஒக்டோபர் 26 மற்றும்  27 ஆம் திகதிகளில்      நடைபெற உள்ளது, International Centre for Foreign Studies(ICFS) கூறியது.

“கொழும்பு கூட்டத்தில் திட்டம் வகுத்திடுக” அன்புமணி

“கொழும்புவில் வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை  சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

அறுகம்பே விவகாரம்: மூவர் கைது

அம்பாறை அறுகம்பே பகுதியில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

பொதுத் தேர்தல் வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏன் இலங்கைப் படைகள் பாதுகாப்பு வழங்குகின்றன?

அதிகரித்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியை அடுத்து இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை சரி செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்தார். 

“நவம்பர் 14 தேர்தல் அல்ல: சிரமதானம்”

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.