ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பிரஜைகள் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள நட்சத்திர தர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த தமக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் ஸ்ரீரங்கா: சொப்பே மகன் கிப்சிறியாம்

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, வவுனியாவில், ஊடகவியலாளர்களை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்துள்ளார்.

”சக்தி வாய்ந்த அரசாங்கமே தேவை, எதிர்க்கட்சியல்ல”

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கட்டுநாயக்கவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், காலத்தின் தேவை பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சியல்ல எனவும், எனவே நவம்பர் 14 பொதுத் தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை முழுமையாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

’ஹிஸ்புல்லா’ அமைப்பின் புதிய தலைவரும் பலி?

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக,  இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 1)

(தோழர் ஜேம்ஸ்)

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்பே மக்கள் ஜேவிபி இன் அரசியலை அதிகம் திரும்பி பார்க்கத் தொடங்கி இருக்கின்றார்கள்.

போருக்குப் பிந்தைய அனுசரணை அரசியல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் போருக்குப் பிறகான அனுசரணை அரசியல் என்பதை ராஜபக்‌ஷ முன்னெடுத்த போரும் இராணுவத்தின் முதன்மை நிலையுமே தீர்மானித்தன.தனது அனுசரணை அரசியலுக்காக அவர் சிங்கள, பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தார்.

தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதும் கேள்விக்குறியாகிறது

இன்றைய சந்தையை அவதானிக்கும் போது, பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிகத் தொடங்கி விட்டன. இதனால், சாதாரண மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாட்டு அரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனைய அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.