ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் – இன்று நான் பகிரங்கப்படுத்துவேன்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி உயிரிழப்பு

மஹியங்கனை லொக்கலோ ஓயாவிலிருந்து 17 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சலுகைகள் குறித்த தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது பாரியார்களின் சலுகைகளை குறைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்காக அரசாங்கம் காத்திருப்பதால் இன்னும் அது குறித்த தீர்மானம் எட்டப்படவில்லை என உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்துள்ள கடவுச்சீட்டு வரிசை

நாட்டில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் திங்கட்கிழமை (21)  முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும்  என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும். இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

21/4 அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார்.

ஈஸ்டர் அறிக்கை வெளியீடு குறித்து கர்தினால் கருத்து

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

யாழ். தேவி வருவதில் மீண்டும் தாமதம்

இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தில் ரயிலை இயக்க முடியாது என ரயில்  கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையில் இருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

3,000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தை, குறைபாடுகளுடன் ரயில்வே துறை கையகப்படுத்தியதே இதற்கு காரணம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று தெரிவித்தார்.

இந்த பாதை நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக இருந்த சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களை தாம் பொறுப்பேற்கப்போவதில்லை எனவும், அதற்கமைய பயணச்சீட்டு வழங்கப்படவோ, பொதிகள் மற்றும் பொருட்கள் பெறப்படவோ அல்லது புகையிரத திணைக்களத்திற்கு வருமானம் அறவிடப்படவோ மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகுதியற்ற பஸ்கள் நீக்கப்பட்டன

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் மற்றும் வேன்கள் சேவைக்கு தகுதியற்றவை என நீக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட பிரதான வாகன பரிசோதகர் தமிந்த திஸாநாயக்க திங்கட்கிழமை (21) குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

சிலாபம் முக்கொலை: இரகசியம் அம்பலம்

சிலாபம் பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிலாபம், சிங்கபுரவில் உள்ள வர்த்தக இல்லத்தில் இடம்பெற்றது கொலை மற்றும் தற்கொலை எனத் தெரியவந்துள்ளது.

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி மனு

நவம்பர் 14ஆம் திகதியன்று பாராளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவை எதிர்த்து சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு அமைய வேட்புமனுக்களை கோருவதற்கும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தவறிவிட்டதாகக் கூறி, ‘அபி ஸ்ரீலங்கா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.