பெப்ரவரி பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு

டிசெம்பரில் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை ( பட்ஜெட்)  தாக்கல் செய்வோம். பெப்ரவரி- மார்ச் மாதத்திற்குள் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தங்காலையில் சனிக்கிழமை (19)   தெரிவித்தார்.

டெலிகொம் தலைவர் இராஜினாமா

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் தலைவர்   ஏ.கே.டி.டி.அரந்தர அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பணிப்பாளர் சபைக்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் உள்ள ஏ.வின் இராஜினாமா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களை முன்னிட்டு SLPP புதிய தீர்மானம்

தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும், எதிர்காலத் தீர்மானங்களுக்கு தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் மூலோபாயக் குழுவொன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறிய 09 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும்.

மஹிந்தவின் வாகனங்களை மீளகேட்கும் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் (backup vehicle) அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை கல்வி குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்

2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை குறைக்க முடியும்…

விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர தெரிவித்துள்ளார்.  கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் கருத்துரைத்தவர்கள், தற்போது மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர தெரிவித்துள்ளார்.

மீண்டும் யாழ் தேவி – மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடக்கு புகையிரத மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன்படி, யாழ்தேவி ரயிலை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

லெபனான் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டுக்கு அருகே வெடித்து சிதறியதாகவும், இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி உதயம்?

தமது சிறப்புரிமைகள் நீக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பும் முகமாக, முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் முன்னணியொன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.