இலங்கை தமிழர்கள்,இரசிகர்களை மறந்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில், ஞாயிற்றுக்கிழமை (27) மிக பிரமாண்டமான் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, இந்திய கட்சிகளும், ஏன்? உலகவாழ் தமிழர்களும் மூக்கில் கையை வைத்து பார்க்கும் அளவுக்கு கனகச்சிதமாக  செய்து முடிக்கப்பட்டுள்ளது. விமர்சனங்கள், குறைப்பாடுகள், சிறுசிறுசம்பவங்களை தவிர்க்கமுடியாதவை. எனினும், 2026ஆம் ஆண்டை நோக்கி, தமிழக வெற்றிக் கழகம் அடி எடுத்து வைத்துள்ளது.

ஜோன்ஸ்டனின் மற்றுமொரு கார் மீட்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஃபோர்ட் ரக கார் ஒன்று, கொட்டாவ – பன்னிபிட்டிய லியனகொட பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, நுகேகொட பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

’ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை’

ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் வில்லத்தரகே, அதன் மூலமே பொருளாதாரம், சமூகம், கலாசாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கூறினார்.

அறுகம்பே தாக்குதல் திட்டம்; மேலும் பலர் கைது

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர். அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம்

சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மருத்துவ சிகிச்சைக்காக ரத்வத்தவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நுகேகொட பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும்?

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.