இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக் கையிருப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) படி, இது 7.9% கணிசமான அதிகரிப்பு ஆகும். இது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன மக்கள் வங்கியின் (PBOC) மாற்று வசதியையும் உள்ளடக்கியதுடன், பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்.
Month: November 2024
புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம்(Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் அதிமேதகு இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பூஜித், ஹேமசிறிக்கு எதிரான விசாரணையைத் தொடர உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துள்ளதுடன் விசாரணையைத் தொடரவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கவும் உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
துங்கிந்த விபத்து: சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது
பதுளை துங்கிந்த பகுதியில், விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தை தெரிவித்துள்ளார்.
இது அரசியல் பழிவாங்கும் செயல் – சுஜீவ
லொஹானின் வாகனம் குறித்த புதிய தகவல்
சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிபாகங்களை இணைத்து பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது என்பது தெளிவாகிறது.
ஜனாதிபதி மீது முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு
மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது
தேர்தலின் பின்னர் கூட்டாட்சி அமைக்கப்படுமா?
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய கூட்டணியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசமைக்கப்படும் என்ற கருத்தை நிராகரித்தது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியை தேர்ந்தெடுக்குமா என்று டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, நவம்பர் 14 பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு (NPP) அறுதிப் பெரும்பான்மை உறுதியாக இருப்பதால், அத்தகைய தேவை ஏற்படாது என்றார்.