உத்திர பிரதேசத்தில் கோர விபத்து: 28 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், இன்று (4) காலை  9 மணியளவில், சுமார் 40 பேருடன், சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அரச,தனியார் ஊழியர்களின் விடுமுறை குறித்த அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாகன இலக்கத்தகடு விநியோகம் இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பாசிக்குடாவில் பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு  பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன 

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய பேச்சு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்    வடக்கு மாகாண  ஆளுநர்   நாகலிங்கம் வேதநாயகன்,  யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

திகனையில் வாகனம்: போதகர் சிக்கினார்

தெல்தெனிய, திகன பிரதேசத்தில் பொலிஸாரால் சனிக்கிழமை (02) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட போலி இலக்கத் தகடுகள் கொண்ட பிராடோ ரக ஜீப், தெல்தெனிய கல்தென்ன போதகருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்குக் கொடுப்பனவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க தற்போதுள்ள அரசாங்கத்திடம் பணம் இருந்திருந்தால் அதனை ஒரே நேரத்தில் செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். 

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பேன்” – அனுரகுமார

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்குமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அழகான சாலைப் பயணங்களில் ஒன்று

நீங்கள் ஒரு நாள் செல்ல வேண்டிய இலங்கையின் மிக அழகான சாலைப் பயணங்களில் ஒன்று
கம்பஹா, கொழும்பு #பாதையில் இருந்து செல்லும் ஒருவர் அதிகாலையில் புறப்பட்டால், நன்றாக சவாரி செய்து அழகான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, மறக்க முடியாத அனுபவத்தை பெற்று, தாமதிக்காமல் வீட்டிற்கு வரக்கூடிய பாதை இது. அப்படி முடியாதவர்கள் இரண்டு மூன்று நாட்கள் இந்தப் பயணத்தில் செல்லலாம்.

சமாதானத்திற்கான போரரசியல் – 3

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1993 இல் தனது தேர்தல்  பிரசாரத்தில் வாக்குறுதியளித்தபடி, குமாரதுங்க புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கினார். பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்த பல உந்துதல்கள் இருந்தபோதிலும், அவரது முயற்சிகள் தைரியமானவை என்று பரவலாகக் கருதப்பட்டது.