கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார். இந்தமுறை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும் இந்த மாதத்திற்கான திகதி ஒதுக்கீடுகள் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Month: November 2024
சிவில் விமானப் போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்
’’நாங்கள் உகாண்டா கதை எதுவும் சொல்லவில்லை”
மின் கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.