வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார்.
Month: November 2024
நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்
மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு தாக்கல்: அடுத்த வாரம் கலந்துரையாடல்
இரத்தினபுரிக்கு பிரதீப் விஜயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு, பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3 | அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம் | ஆங்கில மூலம் : றொனால்ட். எல். வாட்ஸ் | தமிழில் : கந்தையா
சண்முகலிங்கம் மலேசியாறொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
சீரற்ற வானிலை: 38,616 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 24 மாவட்டங்களிலும், தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38,616 ஆகும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 2,096 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு
அமைச்சர்களின் ஓய்வூதியமும் பறிபோகும்?
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என அதன் தலைவர் இந்தியா சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.