“சந்தர்ப்பம் கிட்டட்டும்”

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

”எம்மிடம் ஏற்கனவே ’எல் போர்ட்’ நிர்வாகமே இருக்கிறது”

பொதுத் தேர்தலுக்கான உத்வேகம் குறைவாகவே காணப்படுவதாகவும், அது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக் கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை வாக்களிக்கும் போது, ​​வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் என கணித்த அவர் இதனைத் தெரிவித்தார். 

ஊரடங்குச் சட்டம் அமுல்?

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேலும் தளர்த்தியது

அறுகம்பே பகுதிக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் இஸ்ரேல் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளது. மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது பிரஜைகளுக்கு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 4)

(தோழர் ஜேம்ஸ்)

1980 களின் நடுப் பகுதியிற்கு பின்னராக பன்முகத் தன்மை கொண்ட செயற்பாடுகளின் வெளிபாடாக யாழ்ப்பாணக் பல்கலைக் கழக அறிவுசார் சமூகத்தின் அண்மைய செயற்பாடுகள் மாற்றத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாக எடுத்துக் கொண்டு தமிழ் பிரசேங்களில் ஏற்படப் போகும் மாற்றத்தை நாம் பார்ப்பது இங்கு தேவையாகின்றது.

சுன்னாகம் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை அவசியம்

பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது, ​​பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரின்கடந்த காலத்தை ஆராய்வார்கள். அடுத்து, அந்த நபரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் கடந்த காலமும் பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளால் தற்போது தூக்கி எறியப்பட்ட ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

”இம்முறை தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்”

இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (13) தெரிவித்தார்.

பயணக்கட்டுபாடுகளை நீக்கியது அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்  அறுகம்பேவுக்கான  பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 23ஆம் திகதி நீக்கியுள்ளது. “அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான செய்தி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கியூபாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

கியூபாவில், இன்று (10), அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் 5.9 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதைதொடர்ந்து, அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவானது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், மக்கள் பீதி அடைந்தனர்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.