சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
Month: November 2024
மூவின தீபாவளி கொண்டாட்டம் நாளை
மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு
நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை?
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் 12,114 பேர் பாதிப்பு
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 1ஆம் திகதி முதல் இதுவரையான கால பகுதியில், மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் இதில் முதன்மையாக உள்ளது
பாகிஸ்தானில் கட்டாய ’முடக்கம்’ அமுல்
பாகிஸ்தானில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2,000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால், நவம்பர் 17ஆம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களில் கட்டாய ‘Lockdown’ அறிவிக்கப்பட்டுள்ளது.
கலா சிறீரஞ்சனின் உலகின் மறுபக்கம்
வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் அதிகாரி நியமனம்
தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் தலைமை அதிகாரியாக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். அத்துடன், ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவித்துள்ளார்.
அரிசி விற்கும் இடங்களில் தீவிர சோதனை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 2,800க்கும் மேற்பட்ட அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, அதன் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 425 இடங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.