தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தல் மேடையில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்புகளை வழங்கியிருந்தாலும், அது எதையும் அவரால் இன்று சாதிக்க முடியாதுபோயுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சுமத்தியுள்ள கட்டுப்பாடற்ற வரிச்சுமையை ஜனாதிபதியானவுடன் உடனடியாக நீக்குவேன் என தெரிவித்திருந்தார். அதை அவரால் நிறைவேற்ற முடியாதுபோயுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Month: November 2024
”ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது”
பாராளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழுவொன்று அதிகாரைத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன நேற்று (06) தெரிவித்தார்.
காலி முகத்திடல் தொடர்பில் புதிய தீர்மானம்
”3ஆம் தவணையின் பின் பொருளாதாரம் ஸ்திரமடையும்”
ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார்.
ஸ்ரீ.மு.கா. தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்
பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
விருப்பு வாக்குக்காக கட்டணங்களை செலுத்தும் வேட்பாளர்
பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கான விருப்பு வாக்கை பெற்றுக்கொள்வதற்காக வாக்காளர்களின் குடிநீர், மின்சார கட்டணங்களுக்கான பணம் செலுத்துவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
”வாக்குறுதிகளை 5 வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது”
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றம் சுமத்துவதாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட அன்றி ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் சொத்துக் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக் கையிருப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) படி, இது 7.9% கணிசமான அதிகரிப்பு ஆகும். இது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன மக்கள் வங்கியின் (PBOC) மாற்று வசதியையும் உள்ளடக்கியதுடன், பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்.
புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம்(Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் அதிமேதகு இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.