போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
Month: December 2024
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், 100ஆவது வயதில், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார். அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயற்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார்.
ஓய்வு பெறுகிறார் ஜெனரல் சவேந்திர சில்வா
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். ஜூன் 1, 2022 அன்று CDS ஆக நியமிக்கப்பட்ட ஜெனரல் சில்வா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்கு சேவையாற்றியுள்ளார். CDS இன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும், இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
8000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் விசாரணைகள் நிறைவு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து அடுத்த அமர்வில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
வருட இறுதி விடுமுறைகளை முன்னிட்டு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நுவரெலியாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நுவரெலியா பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளமையினால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகன நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து அதிக பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முதலாம் திகதியில் இருந்து “தூய்மையான இலங்கை”
மரண பயத்தை ஏற்படுத்திய பேருந்து – எடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார்.