ரூபாய் 5.7 பில்லியன் வரி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் பொருட்டு டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் மது உற்பத்தி உரிமம் டிசெம்பர் 5ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Month: December 2024
யாருக்கு Bar அனுமதி பத்திரம்: மாலை தெரியும்
மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று(04) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த சீசனில் சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சபை உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி எம்.பிக்களை சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
13 விவகாரம்: ஜனாதிபதியுடன் பேச வாய்ப்பு
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய ஒழுங்கு பிரச்சினைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.