இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி திங்கட்கிழமை (30) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு அங்கமாகவே இது முமுன்னெடுக்கப்பட்டுள்ளது.
Month: December 2024
காட்டு யானைகளுக்கெதிராக போராட்டம்
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனுராதபுரம் தந்திரிமலை வீதி ஓயாமடுவ பகுதியில் வைத்து மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதையடுத்து பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
”பல திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன”
இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்
381 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, பண்டிகை காலத்தின் போது, மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 381 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத நடுப்பகுதி வரை, மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, அதன் செயலாளர் சமில் முதுகட தெரிவித்தார்.
அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது
9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவரானார் சீ.வி.கே சிவஞானம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு
யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 03) ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.