இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், திங்கட்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Month: December 2024
ஆறுதல் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
36 வருடங்களுக்குப் பின் வீதி ஒப்படைப்பு
திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்
தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நேற்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு டிரம்பின் எச்சரிக்கை
அனுர- நேர்மையான இடது சாரியம்?
“சுயநிர்ணயம் என்பது ஒரு மாக்சிச கருத்து நிலை. இதனை வளர்த்தெடுத்தவர் லெனின். இந்தக் கருத்து நிலையிலும் மாக்சிச கோட்பாட்டின் அடிப்படையிலும் இயங்குபவர் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி. தமிழர்களும் சுயநிர்ணயத்தினை முன்வைப்பவர்கள் அதற்காகப் போராடியவர்கள். ஆகவே தமிழர்கள் ஒத்த கருத்துடையவர்களுடன்தான் இணைய வேண்டும். அவ்வாறானால்தான் வெற்றியும் அடைய முடியும்.