சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்… அச்சத்தில் உலக நாடுகள்

கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது.

மரக்கறிகளின் விலை குறைவடைந்தன

அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  அண்மைய நாட்களாக நிலவும் மழையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்தார். மேலும், மழைக்காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வதற்கான காரணங்களையும் விளக்கினார். 

எம்.பிகளிடம் உணவு கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது. எனினும் அந்தத் தொகை போதாது என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார். 

முன்னாள் எம்.பி வீரவங்ச FCID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்தார். 2022 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும்?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் அந்த மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரியவந்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் கியூபா இணைந்தது

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைந்துள்ளது.  இதன்படி, இன்று (1) முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளது

தனித்துவத்தை விட கூட்டுத்தன்மை முக்கியமானது

நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. நிகழ்காலம் விரைவில் கடந்த காலமாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் சிறந்த முதலீடு நிகழ்காலத்தில் உள்ளது. எனவே, எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய அனுபவம் மிகவும் முக்கியமானது. 2025ஆம் ஆண்டை மறுமலர்ச்சி ஆண்டாகப் பெயரிடலாம். மேலும் இது மக்களின் எதிர்பார்ப்பு ஆண்டு; சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள்  நம்பிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும்

காதலனுக்கு தொலைபேசியை பரிசளித்த பெண் கைது

கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் நியமனம்

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவிடமிருந்து (ஓய்வு) நேற்று புதன்கிழமை (01) பெற்றுக்கொண்டார். 

”விடுதலைப் புலிகள் மஹிந்தவைக் கொல்ல முயற்சிக்கவில்லை”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்ற வதந்திகளுக்குப் பதிலளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி அவரைக் கொல்லும் அளவுக்கு முட்டாள்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.