தைப் பொங்கல் கொண்டாட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

The Formula
இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான, ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் வைத்து இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.