திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னால் வியாழக்கிழமை (02) மாலை இடம்பெற்றது.
Month: January 2025
கடந்த ஆண்டில் அதிகளவான வரி வருமானம்
இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் 1.56 ரில்லியன் ரூபா வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் 1.95 ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் வருமான வரியாக 112.1 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் வற் வரியினுடாக 245.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வைரஸ் குறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பு
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.
’சவாலை ஏற்கத் தயார்’
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். செயற்குழு தன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமித்தால் சவாலை ஏற்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளதாக, நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இன்று (4) தெரிவித்தார். இதன்படி, கடந்த டிசெம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் எனவும் குணவர்தன குறிப்பிட்டார். 12.5 கிலோகிராம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.1,482 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.694 ஆகவும் உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.
அதிக ஒளி, ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை
சர்வதேச இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி
சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு அதிகரிப்பு
சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.