காசாவை அமெரிக்கா தன்வசப்படுத்தி, எடுத்து கொண்டால் அதன்பின்னர் எப்படி இருக்கும் என்பது பற்றிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
Month: March 2025
சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.
சஞ்சீவ படுகொலை: இதுவரை 12 பேர் கைது
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலையைத் திட்டமிட சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக இவ்விருவருடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.